Shanmugan Murugavel / 2025 ஏப்ரல் 29 , மு.ப. 10:39 - 0 - {{hitsCtrl.values.hits}}

இருபதுக்கு - 20 போட்டிகளில் சதமடித்த இளையவராக தனது பெயரை இந்தியன் பிறீமியர் லீக்கின் ராஜஸ்தான் றோயல்ஸ் அணியின் வைபவ் சூரியவன்ஷி பதிந்து கொண்டார்.
குஜராத் டைட்டான்ஸுக்கெதிராக திங்கட்கிழமை (28) நடைபெற்ற போட்டியில் 35 போட்டிகளில் சதத்தைப் பூர்த்தி செய்த 14 வயதான சூரியவன்ஷி, 2013ஆம் ஆண்டு மும்பைக்கெதிராக இந்தியாவின் மகாராஷ்ராவின் விஜய் ஸோல் 18 வயதில் சதம் பெற்ற இள வயதில் சதம் பெற்ற சாதனையை முறியடித்தார்.
ஜெய்ப்பூரில் நடைபெற்ற குறித்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட குஜராத், அணித்தலைவர் ஷுப்மன் கில்லின் 84 (50), ஜொஸ் பட்லரின் ஆட்டமிழக்காத 50 (26), சாய் சுதர்ஷனின் 39 (30) ஓட்டங்களோடு 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 209 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில், மகேஷ் தீக்ஷன 4-0-35-2, சந்தீப் ஷர்மா 4-0-33-1 என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தனர்.
பதிலுக்கு 210 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான், சூரியவன்ஷியின் 101 (38), யஷஸ்வி ஜைஸ்வாலின் ஆட்டமிழக்காத 70 (40), அணித்தலைவர் ரியான் பராக்கின் ஆட்டமிழக்காத 32 (15) ஓட்டங்களோடு 15.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்திருந்தது.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago