Shanmugan Murugavel / 2026 பெப்ரவரி 17 , மு.ப. 08:33 - 0 - {{hitsCtrl.values.hits}}

இத்தாலிய சீரி ஏ தொடரில், தமது மைதானத்தில் திங்கட்கிழமை (16) நடைபெற்ற றோமாவுடனான போட்டியை 2-2 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான நாப்போலி சமப்படுத்தியது.
நாப்போலி சார்பாக லியனார்டோ ஸ்பினஸோலா, அலிஸன் சன்டோஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றதோடு, றோமா சார்பாகப் பெறப்பட்ட இரண்டு கோல்களையும் டொன்யெல் மலன் பெற்றிருந்தார்.
சீரி ஏ புள்ளிகள் பட்டியலில் 61 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் இன்டர் மிலன் காணப்படுகின்றது. 53 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் ஏ.சி மிலனும், 50 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் நாப்போலியும், 47 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் றோமாவும் காணப்படுகின்றது. இதில் மற்றைய அணிகளை விட ஏ.சி மிலன் ஒரு போட்டி குறைவாக விளையாடியுள்ளது.
27 minute ago
36 minute ago
41 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
36 minute ago
41 minute ago
2 hours ago