Shanmugan Murugavel / 2023 மே 01 , பி.ப. 08:31 - 0 - {{hitsCtrl.values.hits}}

இத்தாலியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சீரி ஏ தொடரில், தமது மைதானத்தில் நேற்று நடைபெற்ற சலெர்னிடானாவுடனான போட்டியை 1-1 என்ற கோல் கணக்கில் நாப்போலி சமப்படுத்தியது.
இதேவேளை, தமது மைதானத்தில் நடைபெற்ற லேஸியோவுடனான போட்டியை 3-1 என்ற கோல் கணக்கில் இன்டர் மிலன் வென்றது.
இந்நிலையில், பொலொக்னாவின் மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியை 1-1 என்ற கோல் கணக்கில் ஜுவென்டஸ் சமப்படுத்தியது.
சீரி ஏ புள்ளிகள் பட்டியலில் 79 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் நாப்போலி காணப்படுகின்றது. 61 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் லேஸியோ காணப்படுவதுடன், 60 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் ஜுவென்டஸ் காணப்படுவதுடன், 57 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் இன்டர் மிலன் காணப்படுகின்றது. ஏ.சி மிலன், றோமாவும் தலா 57 புள்ளிகளுடன் காணப்படுகின்றபோதும், கோலெண்ணிக்கை வித்தியாசத்தில் அவை ஐந்தாம், ஆறாமிடங்களில் காணப்படுகின்றன.
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago