Shanmugan Murugavel / 2025 பெப்ரவரி 03 , பி.ப. 07:15 - 0 - {{hitsCtrl.values.hits}}

இத்தாலியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சீரி ஏ தொடரில், தமது மைதானத்தில் திங்கட்கிழமை (03) அதிகாலை நடைபெற்ற நாப்போலியுடனான போட்டியை 1-1 என்ற கோல் கணக்கில் றோமா சமப்படுத்தியது.
நாப்போலி சார்பாகப் பெறப்பட்ட கோலை லியனார்டோ ஸிபினஸோலா பெற்றதோடு, றோமா சார்பாகப் பெறப்பட்ட கோலை அங்கெலினோ பெற்றிருந்தார்.
இதேவேளை சான் சிரோவில் ஞாயிற்றுக்கிழமை (02) நடைபெற்ற நடப்புச் சம்பியன்களான இன்டர் மிலன், ஏ.சி மிலனுக்குமிடையிலான போட்டியானது 1-1 என்ற கோல் கணக்கில் சமப்படுத்தியது. இன்டர் மிலன் சார்பாகப் பெறப்பட்ட கோலை ஸ்டெஃபான் டி வேர்ஜி பெற்றதோடு, ஏ.சி மிலன் சார்பாகப் பெறப்பட்ட கோலை டிஜ்ஜனி றெஜின்டர்ஸ் பெற்றிருந்தார்.
சீரி ஏ புள்ளிகள் பட்டியலில் 54 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் நாப்போலி உள்ளது. 51 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் இன்டர் மிலனும், 47 புள்ளிகளுடன் அத்லாண்டா மூன்றாமிடத்திலும், 40 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் ஜுவென்டஸும் காணப்படுகின்றன. இதில் மற்றைய அணிகளை விட இன்டர் மிலன் ஒரு போட்டி குறைவாக விளையாடியுள்ளது.
24 minute ago
42 minute ago
47 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
42 minute ago
47 minute ago
48 minute ago