Shanmugan Murugavel / 2026 ஜனவரி 08 , பி.ப. 05:18 - 0 - {{hitsCtrl.values.hits}}

இத்தாலிய சீரி ஏ தொடரில், தமது மைதானத்தில் புதன்கிழமை (07) நடைபெற்ற ஹெலாஸ் வெரோனாவுடனான போட்டியை 2-2 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான நாப்போலி சமப்படுத்தியிருந்தது.
நாப்போலி சார்பாக ஸ்கொட் மக்டொமினி, ஜியோவனி டி லொரென்ஸோ ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். வெரோனா சார்பாக மார்டின் பிறெஸே, கிஃப்ட் ஓர்பன் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
இந்நிலையில் தமது மைதானத்தில் வியாழக்கிழமை (08) பியொரென்டினாவுடனான போட்டியை 2-2 என்ற கோல் கணக்கில் லேஸியோ சமப்படுத்தியது. லேஸியோ சார்பாக டனிலோ கடல்டி, பெட்ரோ ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். பியொரென்டினா சார்பாக றொபின் கொஸென்ஸ், அல்பேர்ட் குவாமுன்ட்சன் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
சீரி ஏ புள்ளிகள் பட்டியலில் 42 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் இன்டர் மிலன் காணப்படுகின்றது. ஏ.சி மிலனும், நாப்போலியும் தலா 38 புள்ளிகளைப் பெற்றுள்ளபோதும் அவற்றுக்கிடையேயான போட்டியில் மேம்பட்ட பெறுபேறு காரணமாக மிலன் இரண்டாமிடத்திலும், நாப்போலி மூன்றாமிடத்திலும் காணப்படுகின்றன. ஜுவென்டஸும், றோமாவும் தலா 36 புள்ளிகளைப் பெற்றுள்ளபோதும் இதிலே குறிப்பிட்ட காரணம் காரணமாக ஜுவென்டஸ் நான்காமிடத்திலும், ஜுவென்டஸ் ஐந்தாமிடத்திலும் காணப்படுகின்றன.
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago