Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
Shanmugan Murugavel / 2025 பெப்ரவரி 09 , பி.ப. 05:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்பானிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லா லிகாத் தொடரில், தமது மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (09) அதிகாலை நடைபெற்ற அத்லெட்டிகோ மட்ரிட்டுடனான போட்டியை 1-1 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான றியல் மட்ரிட் சமப்படுத்தியது.
றியல் மட்ரிட் சார்பாகப் பெறப்பட்ட கோலை கிலியான் மப்பே பெற்றதோடு, அத்லெட்டிகோ மட்ரிட் சார்பாகப் பெறப்பட்ட கோலை ஜூலியன் அல்வரேஸ் பெற்றார்.
லா லிகா புள்ளிகள் பட்டியலில் 50 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் றியல் மட்ரிட் உள்ளது. 49 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் அத்லெட்டிகோ மட்ரிட்டும், 45 புள்ளுகளுடன் மூன்றாமிடத்தில் பார்சிலோனாவும், 44 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் அத்லெட்டிக் பில்பாவோவும் காணப்படுகின்றது. இதில் மற்றைய அணிகளை விட பார்சிலோனா ஒரு போட்டி குறைவாக விளையாடியுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
36 minute ago
2 hours ago