Shanmugan Murugavel / 2025 பெப்ரவரி 16 , பி.ப. 09:23 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லா லிகாத் தொடரில், ஒஸஸுனாவின் மைதானத்தில் சனிக்கிழமை (15) நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியை 1-1 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான றியல் மட்ரிட் சமப்படுத்தியது.
மட்ரிட் சார்பாகப் பெறப்பட்ட கோலை கிலியான் மப்பே பெற்றதோடு, ஒஸஸுனா சார்பாகப் பெறப்பட்ட கோலை அன்டே புடிமிர் பெற்றிருந்தார்.
இதேவேளை தமது மைதானத்தில் நடைபெற்ற செல்டா விகோவுடனான போட்டியை 1-1 என்ற கோல் கணக்கில் அத்லெட்டிகோ மட்ரிட் சமப்படுத்தியது. அத்லெட்டிகோ சார்பாகப் பெறப்பட்ட கோலை அலெக்ஸான்டர் சொர்லொத் பெற்றதோடு, விகோ சார்பாகப் பெறப்பட்ட கோலை லாகோ அஸ்பஸ் பெற்றிருந்தார்.
இந்நிலையில் வில்லாறியலின் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (16) அதிகாலை நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியை 1-1 என்ற கோல் கணக்கில் வலென்சியா சமப்படுத்தியது.
லா லிகா புள்ளிகள் பட்டியலில் 51 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் றியல் மட்ரிட் உள்ளது. 50 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் அத்லெட்டிகோ மட்ரிட்டும், 48 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் பார்சிலோனாவும், 44 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் அத்லெட்டிக் பில்பாவோவும் காணப்படுகின்றது. இதில் பார்சிலோனாவும், பில்பாவோவும் மற்றைய அணிகளை விட ஒரு போட்டி குறைவாக விளையாடியுள்ளன.
47 minute ago
52 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
52 minute ago
2 hours ago