Shanmugan Murugavel / 2021 மார்ச் 02 , மு.ப. 04:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லா லிகா தொடரில், நடப்புச் சம்பியன்களான றியல் மட்ரிட்டின் மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற அவ்வணிக்கும், றியல் சொஸைடட்டுக்குமிடையிலான போட்டியானது 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.
றியல் மட்ரிட் சார்பாகப் பெறப்பட்ட கோலை வின்ஷியஸ் ஜூனியர் பெற்றிருந்த நிலையில், றியல் சொஸைடட் சார்பாகப் பெறப்பட்ட கோலை போர்டு பெற்றிருந்தார்.
அந்தவகையில், லா லிகா புள்ளிகள் தரவரிசையில், 58 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் அத்லெட்டிகோ மட்ரிட் உள்ளது. பார்சிலோனாவும், றியல் மட்ரிட்டும் தலா 53 புள்ளிகளைப் பெற்றுள்ளபோதும், கோலெண்ணிக்கை அடிப்படையில் இரண்டாம், மூன்றாமிடங்களிலுள்ளன. நான்காமிடத்தில் 48 புள்ளிகளுடன் செவில்லாவுள்ளது. இதில், பார்சிலோனா, றியல் மட்ரிட்டை விட மற்றைய இரண்டு அணிகளும் ஒரு போட்டி குறைவாக விளையாடியுள்ளன.
43 minute ago
50 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
50 minute ago
1 hours ago
2 hours ago