Shanmugan Murugavel / 2025 ஜனவரி 12 , பி.ப. 04:56 - 0 - {{hitsCtrl.values.hits}}

இத்தாலியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சீரி ஏ தொடரில், தமது மைதானத்தில் சனிக்கிழமை (11) நடைபெற்ற கைகரியுடனான போட்டியை 1-1 என்ற கோல் கணக்கில் ஏ.சி மிலன் சமப்படுத்தியது.
மிலன் சார்பாகப் பெறப்பட்ட கோலை அல்வரோ மொராட்டா பெற்றதோடு, கைகரி சார்பாகப் பெறப்பட்ட கோலை நதிர் ஸொர்டியா பெற்றிருந்தார்.
இதேவேளை டொரினோவின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியை 1-1 என்ற கோல் கணக்கில் ஜுவென்டஸ் சமப்படுத்தியது. ஜுவென்டஸ் சார்பாகப் பெறப்பட்ட கோலை கெனான் யில்டிஸ் பெற்றதோடு, டொரினோ சார்பாகப் பெறப்பட்ட கோலை நிகொலா விளாசிச் பெற்றிருந்தார்.
இந்நிலையில் உடினிஸின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியை 0-0 என்ற கோல் கணக்கில் அத்லாண்டா சமப்படுத்தியது.
4 minute ago
22 minute ago
27 minute ago
28 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
22 minute ago
27 minute ago
28 minute ago