Shanmugan Murugavel / 2020 ஒக்டோபர் 28 , மு.ப. 07:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சம்பியன்ஸ் லீக் தொடரில், ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான பொரூசியா மொச்சென்கிளெட்பாவின் மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற அவ்வணிக்கும், ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட்டுக்கும் இடையிலான குழு பி போட்டி ஒன்றானது 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.
றியல் சார்பாக, கரிம் பென்ஸீமா, கஸேமீரோ ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். மொச்சென்கிளெட்பா சார்பாகப் பெறப்பட்ட இரண்டு கோல்களையும் மார்க்கஸ் துராம் பெற்றார்.
இதேவேளை, உக்ரேனியக் கழகமான ஷக்தார் டொனெஸ்டெக்கின் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற அவ்வணிக்கும் இத்தாலிய சீரி ஏ கழகமான இன்டர் மிலனுக்குமிடையிலான இன்னொரு குழு பி போட்டியொன்றானது 0-0 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்திருந்தது.
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago