Shanmugan Murugavel / 2016 பெப்ரவரி 04 , மு.ப. 01:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையே இடம்பெற்று வரும் இங்கிலாந்து பிறீமியர் லீக்கின், கடந்த புதன்கிழமை (03) இடம்பெற்ற போட்டிகளில், செல்சி, வட்போர்ட் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டி சமநிலையில் முடிவடைந்ததுடன் நியூகாசிலை எவெர்ற்றன் வென்றிருந்தது.
செல்சி, வட்போர்ட் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில், இரண்டு அணிகளும் கோல்களைப் பெறாத நிலையில், போட்டி சமநிலையில் முடிவடைந்தது. இதன் மூலம், இப்பருவகாலத்தின் இடையில், ஜோஸ் மொரின்ஹோவை கூஸ் ஹிட்டிங் பயிற்சியாளராகப் பிரதீடு செய்த பின்னரான ஏழு பிறீமியர் லீக் போட்டிகளிலும் செல்சி தோல்வியடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, பிறீமியர் லீக் அணிகளுக்கான புள்ளிகள் தரவரிசைப் பட்டியலில் 29 புள்ளிகளுடன் செல்சி 13ஆவது இடத்தில் இருக்கின்றது.
இதேவேளை, எவெர்ற்றன், நியூகாசில் அணிகளுக்கிடையிலான போட்டியில், எவெர்ற்றன் அணி, 3-0 என்ற கோல்கணக்கில் வெற்றிபெற்றிருந்தது. இப்போட்டியில், 23ஆவது நிமிடத்தில் ஆரோன் லென்னோன் ஒரு கோலையும் போட்டியின் 88ஆவது நிமிடம், இறுதி நிமிடத்தில் கிடைக்கப்பெற்ற பெனால்டிகளின் மூலம் றொஸ் பார்க்லியும் எவெர்ற்றனுக்காக கோல்களைப் பெற்றிருந்தனர். இந்த வெற்றியுடன், பிறீமியர் லீக் அணிகளுக்கான புள்ளிகள் தரவரிசைப்பட்டியலில் 11ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ள எவெர்ற்றன், 32 புள்ளிகளைப் பெற்றுள்ளது.
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago