2026 மே 12, செவ்வாய்க்கிழமை

dd

சம்பியனாகிய பார்சிலோனா

Shanmugan Murugavel   / 2026 மே 12 , மு.ப. 09:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானிய லா லிகா தொடரில் பார்சிலோனா சம்பியனாகியது.

தமது மைதானத்தில் திங்கட்கிழமை (11) நடைபெற்ற றியல் மட்ரிட்டுடனான போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் வென்றதன் மூலமே பார்சிலோனா சம்பியனாகியது.

இன்னும் மூன்று போட்டிகள் உள்ள நிலையில் 91 புள்ளிகளை பார்சிலோனா பெற்றுள்ள நிலையில், 77 புள்ளிகளுடன் இரண்டாமிடத்திலுள்ள றியல் மட்ரிட் அதிக பட்சமாக 87 புள்ளிகளையே அடைய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

பார்சிலோனா சார்பாக மார்க்கஸ் றஷ்ஃபோர்ட், பெரன் டொரஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .