Shanmugan Murugavel / 2020 ஒக்டோபர் 21 , பி.ப. 04:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சம்பியன்ஸ் லீக் தொடரில், பிரெஞ்சு லீக் 1 கழகமான பரிஸ் ஸா ஜெர்மைனின் மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற அவ்வணிக்கும், இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் யுனைட்டெட்டுக்கும் இடையிலான குழு எச் போட்டி ஒன்றில் அவ்வணி 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது.
மன்செஸ்டர் யுனைட்டெட் சார்பாக, புரூனோ பெர்ணான்டஸ், மார்க்கஸ் றஷ்ஃபோர்ட் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றதோடு, பரிஸ் ஸா ஜெர்மைன் பெற்ற கோலானது ஓவ்ண் கோல் முறையில் கிடைக்கப்பெற்றிருந்தது.
இதேவேளை, இன்னொரு இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான செல்சியின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணி, ஸ்பானிய லா லிகா கழகமான செவில்லாவுக்கிடையிலான குழு ஈ போட்டியானது 0-0 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்திருந்தது.
இந்நிலையில், இத்தாலிய சீரி ஏ கழகமான லேஸியோவின் மைதானத்தில் நடைபெற்ற குழு எஃப் போட்டியொன்றில், ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான பொரூசியா டொட்டமுண்டானது 1-3 என்ற கோல் கணக்கில் லேஸியோவிடம் தோல்வியடைந்திருந்தது. லேஸியோ சார்பாக, சிரோ இம்மொபைலி, ஜீன்-டானியல் அக்பா அக்புரோ ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றதோடு, மற்றைய கோல் ஓவ்ண் கோல் முறையில் கிடைக்கப்பெற்றிருந்தது. பொரூசியா டொட்டமுண்ட் சார்பாகப் பெறப்பட்ட கோலஇ எர்லிங் பிறாட் ஹலான்ட் பெற்றிருந்தார்.
7 minute ago
16 minute ago
21 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
16 minute ago
21 minute ago
1 hours ago