Shanmugan Murugavel / 2023 பெப்ரவரி 23 , மு.ப. 09:04 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சம்பியன்ஸ் லீக் தொடரில், இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான லிவர்பூலின் மைதானத்தில் நேற்று அதிகாலை நடைபெற்ற அவ்வணி உடனான இறுதி 16 அணிகளுக்கான முதலாவது சுற்றுப் போட்டியில் 5-2 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான றியல் மட்ரிட் வென்றது.
ஸ்பானிய லா லிகா கழகமான மட்ரிட் சார்பாக, வின்ஷியஸ் ஜூனியர், கரிம் பென்ஸீமா ஆகியோர் தலா இரண்டு கோல்களையும், ஈடர் மிலிட்டாவோ ஒரு கோலையும் பெற்றனர். லிவர்பூல் சார்பாக, டர்வின் நுனேஸ், மொஹமட் சாலா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
4 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
7 hours ago