2026 ஏப்ரல் 01, புதன்கிழமை

சம்பியனானது இங்கிலாந்து

Shanmugan Murugavel   / 2016 மார்ச் 14 , பி.ப. 12:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆறு தேசங்கள் சம்பியன்ஷிப் றக்பி தொடரின் சம்பியன்களாக, இங்கிலாந்து அணி தெரிவாகியுள்ளது. ஸ்கொட்லாந்து அணிக்கும் பிரான்ஸ் அணிக்குமிடையில் இடம்பெற்ற போட்டியில், ஸ்கொட்லாந்து அணி வெற்றிபெற்றதைத் தொடர்ந்தே, இங்கிலாந்து அணி சம்பியனாகியது.

கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற போட்டியில், வேல்ஸ் அணிக்கெதிராக 25-21 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி, சம்பியன் பட்டத்தை நெருங்கியிருந்தது.

இந்நிலையில், பிரான்ஸ் அணிக்கும் ஸ்கொட்லாந்து அணிக்குமிடையிலான போட்டியில் பிரான்ஸ் அணி, 18-29 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, சம்பியன் பட்டத்தை வெல்லும் வாய்ப்பை பிரான்ஸ் இழந்தது. இதனால், இங்கிலாந்து அணி சம்பியன் பட்டம் வென்றது.

2011ஆம் ஆண்டுக்குப் பின்னர், ஆறு தேசங்கள் சம்பியன்ஷிப் தொடரை, இங்கிலாந்து அணி வெற்றிகொள்ளும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .