2026 ஏப்ரல் 01, புதன்கிழமை

சம்பியன்ஸ் லீக்கிலிருந்து ‘பார்சிலோனா வெளியேற்றப்படும் என அச்சம்’

Shanmugan Murugavel   / 2016 ஏப்ரல் 06 , மு.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

சம்பியன்ஸ் லீக் தொடரிலிருந்து பார்சிலோனா வெளியேற்றப்படும் என அச்சம் காணப்படுவதாக ஸ்பெய்னின் கால்பந்தாட்டக் கழகமான அத்லெட்டிகோ மட்ரிட் அணியின் தடுப்பாட்டக்காரர் லூயிஸ் தெரிவித்துள்ளதோடு கடந்த செவ்வாய்க்கிழமை பார்சிலோனாவுடன் இடம்பெற்ற போட்டியில் பாகுபாடான முறையில் நடத்தப்பட்டது என அவர் மேலும் தெரிவித்தார்.

பார்சிலோனா அணியின் மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில் பெர்னாண்டோ டொரேஸ் பெற்ற கோலின் மூலம் அவ்வணி 1-0 என முன்னிலை வகித்திருந்தாலும் பின்னர் 2-1 என்ற கோல்கணக்கில் தோல்வியடைந்தது. பார்சிலோனா சார்பாக பெறப்பட்ட இரண்டு கோல்களையும் அத்லெட்டிகோ மட்ரிட் அணியின் வலது பின்கள வீரரான குவான்பிரன் டொரெஸை உதைத்த லூயிஸ் சுவரேஸே பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

எங்களைப் போன்று மைதானத்திலிருந்து வெளியேற்றப்படுவதற்கு பார்சிலோனா அணியின் வீரர்கள் என்ன செய்யவேண்டும் என்று தனக்குத் தெரியவில்லை என அத்லெட்டிகோ மட்ரிட் அணியின் தடுப்பாட்டக்காரரும் பிரேஸில் தேசிய கால்பந்தாட்ட அணியின் இடது பின்கள வீரரான பிலிப்பே லூயிஸ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தான் நினைப்பதை தன்னால் கூற முடியாது என்றும் ஆனால் பெர்னாண்டோ டொரேஸுடன் தனக்கு கோபமில்லை என அத்லெட்டிகோ மட்ரிட் அணியின் பயிற்சியாளர் டியாகோ சிமியோனே தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .