Shanmugan Murugavel / 2016 மார்ச் 17 , மு.ப. 04:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐரோப்பிய கால்பந்தாட்ட கழகங்களுக்கிடையே இடம்பெற்று வரும் சம்பியன்ஸ் லீக் தொடரின் காலிறுதிச் சுற்றுக்கு தற்போதைய சம்பியன்கள் பார்சிலோனா நுழைந்துள்ளது.
பார்சிலோனா, ஆர்சனல் அணிகளுக்கிடையில் இடம்பெற்ற முதல் சுற்றுப் போட்டியில் 2-0 என்ற கோல்கணக்கில் பார்சிலோனா அணி வெற்றி பெற்றிருந்த நிலையில், கடந்த புதன்கிழமை (16) இடம்பெற்ற இரண்டாவது சுற்றுப் போட்டியிலும் 3-1 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று, மொத்தமாக 5-1 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றது.
பார்சிலோனா அணி சார்பாக பெறப்பட்ட கோல்களை, போட்டியின் 18ஆவது, 65ஆவது, 88ஆவது நிமிடங்களில் முறையே நேமர், லூயிஸ் சுவரேஸ், லியானல் மெஸ்ஸி ஆகியோர் பெற்றனர்.
இதேவேளை, பெயார்ண் முனிச், ஜுவென்டஸ் ஆகிய அணிகளுக்கிடையிலான முதல் சுற்றுப் போட்டிகளில், இரண்டு அணிகளும் தலா இரண்டு கோல்களைப் பெற்று சமநிலையில் இருந்த நிலையில், மேலதிக நேரம் வரை சென்ற இரண்டாவது சுற்றுப் போட்டியில், 4-2 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்ற பெயார்ண் முனிச், மொத்தமாக, 6-4 என்ற கோல்கணக்கில் காலிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
28 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
2 hours ago