2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

சம்பியன்ஸ் லீக்: மன்செஸ்டர் சிற்றி வெற்றி

Shanmugan Murugavel   / 2016 ஓகஸ்ட் 17 , பி.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையே இடம்பெறும் சம்பியன்ஸ் லீக் தொடருக்கான தகுதிப் போட்டியின் முதலாவது சுற்றில், இங்கிலாந்து பிறீமியர் லீக்கின் கடந்த பருவகாலத்தில் நான்காமிடம் பெற்ற மன்செஸ்டர் சிற்றி, றோமானிய கால்பந்தாட்டக் கழகமான ஸ்டவா புக்கிரேஜ் அணியைத் தோற்கடித்துள்ளது.

இப்போட்டியில், மன்செஸ்டர் சிற்றிக்கு இரண்டு பெனால்டி வாய்ப்புகள் கிடைத்திருந்த நிலையில், ஒன்றை கோல்காப்பாளரிடம் பிடிகொடுத்த சேர்ஜியோ அக்ரோ, ஒன்றை கோல்கம்பத்துக்கு வெளியால் அடித்திருந்த போதும், இப்போட்டியில் மூன்று கோல்களைப் பெற்று இப்போட்டியின் நாயகனாக தெரிவாகியிருந்தார்.

குறித்த போட்டியில் 5-0 என்ற கோல்கணக்கில் மன்செஸ்டர் சிற்றி வெற்றி பெற்றிருந்த நிலையில், அக்ரோவுக்கு மேலதிகமாக டேவிட் சில்வா, நொலிட்டோ ஆகியோரும் தலா ஒவ்வொரு கோல்களைப் பெற்றிருந்தனர்.

சம்பியன்ஸ் லீக்கின் குழு நிலைப் போட்டிகளுக்கு தெரிவாகும் அணியை தேர்வு செய்யும் இரண்டாவது சுற்றுப் போட்டி, எதிர்வரும் 24ஆம் திகதி இடம்பெறவுள்ளது. ‌


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .