2026 ஏப்ரல் 01, புதன்கிழமை

சம்பியன்ஸ் லீக்: றியல் மட்ரிட் அதிர்ச்சித் தோல்வி

Shanmugan Murugavel   / 2016 ஏப்ரல் 07 , மு.ப. 01:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையே இடம்பெற்று வரும் சம்பியன்ஸ் லீக்கின் காலிறுதிப் போட்டிகளில் ஜெர்மனிய கால்பந்தாட்டக் கழகமான ஃபோர்.எஃப்.எல் வொல்ஸ்பேர்க் வெற்றி பெற்றதுடன் இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகமான மன்செஸ்டர் சிற்றி, பிரான்ஸ் கால்பந்தாட்டக் கழகமான பரிஸ் செய்ண்ட் ஜெர்மைன் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டி சமநிலையில் முடிவடைந்தது.

ஃபோர்.எஃப்.எல் வொல்ஸ்பேர்க், ஸ்பானிய கால்பந்தாட்டக் கழகமான றியல் மட்ரிட் ஆகிய அணிகளுக்கிடையில் ஃபோர்.எஃப்.எல் வொல்ஸ்பேர்க் அணியின் மைதானத்தில் இடம்பெற்ற முதலாவது சுற்று காலிறுதிப் போட்டியில் 2-0 என்ற கோல்கணக்கில் ஃபோர்.எஃப்.எல் வொல்ஸ்பேர்க் அணி அதிர்ச்சி வெற்றி பெற்றுள்ளது. இப்போட்டியில் றியல் மட்ரிட் அணியின் கரித் பேலுக்கு பெனால்டி ஒன்று வழங்கப்படவில்லையென்பதுடன் அவ்வணியின் மத்தியகள வீரர் கஸேமெய்ரோ தவறு புரிந்தார் என சர்ச்சைக்குரிய வகையில் பெனால்டி வழங்கப்பட்டிருந்தது.

2004ஆம் ஆண்டுக்கு பின்னர் முதற்தடவையாக காலிறுதிப் போட்டியில் தோல்வியடைந்த பத்து முறை சம்பியன்ஸ் லீக் வெற்றியாளர்களான றியல் மட்ரிட், தற்போது இரண்டு கோல்கள் பின்தங்கியுள்ள நிலையில், எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (12) றியல் மட்ரிட் அணியின் மைதானத்தில் இடம்பெறும் இரண்டாவது சுற்று காலிறுதிப் போட்டியில் இரண்டு கோல்களுக்கு அதிகமான வித்தியாசத்தில் வெற்றி பெற்றாலே இம்முறை சம்பியன்ஸ் லீக்கின் அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, மன்செஸ்டர் சிற்றி, பரிஸ் செய்ண்ட் ஜெர்மைன் ஆகிய அணிகளுக்கிடையில் பரிஸ் செய்ண்ட் ஜெர்மைன் அணி மைதானத்தில் இடம்பெற்ற முதலாவது சுற்று காலிறுதிப் போட்டியில் இரண்டு அணிககளும் தலா இரண்டு கோல்களைப் பெற்ற நிலையில், போட்டி சமநிலையில் முடிவடைந்தது. இப்போட்டியில் மன்செஸ்டர் சிற்றி சார்பாக பெறப்பட்ட கோல்களை, போட்டியின் 38ஆவது நிமிடத்தில் கெவின் டீ ப்ரூனும் 72ஆவது நிமிடத்தில் பெர்னாண்டின்ஹோவும் பெற்றனர். பரிஸ் செய்ண்ட் ஜெர்மைன் அணி சார்பாக பெறப்பட்ட கோல்களை, போட்டியின் 41ஆவது நிமிடத்தில் ஸல்டான் இப்ராமோவிக்கும் 59ஆவது நிமிடத்தில் அட்ரியன் ரபியோட்டும் பெற்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .