Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஜனவரி 01 , பி.ப. 09:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், நேற்று இடம்பெற்ற போட்டிகளில், மன்செஸ்டர் சிற்றி, கிறிஸ்டல் பலஸ் அணிகளுக்கிடையிலான போட்டி சமநிலையில் முடிவடைந்ததுடன், ஆர்சனல், வெஸ்ட் ப்ரோம் அணிகளுக்கிடையிலான போட்டியும் சமநிலையில் முடிவடைந்தது.
மன்செஸ்டர் சிற்றி, கிறிஸ்டல் பலஸ் அணிகளுக்கிடையிலான போட்டியில், இரண்டு அணிகளும் கோலெதனையும் பெறாத நிலையில், போட்டி சமநிலையில் முடிவடைந்திருந்தது.
இப்போட்டியின் இறுதிக் கணத்தில் கிறிஸ்டல் பலஸின் முன்கள வீரர் வில்பிரைட் ஸாகாவுடன் விதிமுறைக்கு மீறி சிற்றியின் ரஹீம் ஸ்டேர்லிங் நடந்து கொண்டதால், கிறிஸ்டல் பலஸுக்கு பெனால்டி வழங்கப்பட்டது. எனினும், லூகா மிலிவொஜெவிக் செலுத்திய பெனால்டியை சிற்றியின் கோல் காப்பாளர் எடெர்சன் தடுத்தன் காரணமாகவே போட்டியை சிற்றி சமநிலையில் முடித்து, இப்பருவகால பிறீமியர் லீக்கில் தோற்கடிக்கப்பட முடியாத அணியாகத் தொடருகின்றது. பிறீமியர் லீக் வரலாற்றில், 2003-04 பருவகாலத்தில் ஆர்சனல் தோற்கடிக்கப்பட முடியாத அணியாக விளங்கியது.
எவ்வாறெனினும், இப்போட்டியை சமநிலையில் முடித்துக் கொண்டதன் மூலம் இப்பருவகால பிறீமியர் லீக்கில் தொடர்ச்சியாக 18 போட்டிகளில் பெற்று வந்த வெற்றி முடிவுக்கு வந்திருந்தது.
இதேவேளை, இப்போட்டியின்போது காயமடைந்த மன்செஸ்டர் சிற்றியின் முன்கள வீரர் கப்ரியல் ஜெஸூஸ் ஒரு மாதத்துக்கு மேல் விளையாட மாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இப்போட்டியின் இறுதி நிமிடத்தில் உதையொன்றை எதிர்கொண்ட மத்தியகள வீரர் கெவின் டி ப்ரூனே ஸ்ரெச்சரில் மைதானத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஆர்சனல், வெஸ்ட்ப்ரோம்விச் அல்பியன் அணிகளுக்கிடையிலான போட்டியில், இரண்டு அணிகளும் தலா ஒவ்வொரு கோலைப் பெற்ற நிலையில், போட்டி சமநிலையில் முடிவடைந்திருந்தது.
அந்தவகையில், இப்போட்டிகளின் முடிவில், 59 புள்ளிகளுடன், பிறீமியர் லீக் புள்ளிகள் தரவரிசையில் முதலிடத்தில் மன்செஸ்டர் சிற்றி தொடருவதுடன், 45 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் செல்சியும் 44 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் மன்செஸ்டர் யுனைட்டெட்டும் உள்ளன. லிவர்பூல் 41 புள்ளிகளுடன் நான்காமிடத்திலும் ஆர்சனல் 38 புள்ளிகளுடன் ஐந்தாமிடத்திலும் டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் 37 புள்ளிகளுடன் ஆறாமிடத்திலுமுள்ளன.
2 hours ago
2 hours ago
19 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
19 Jul 2025