Shanmugan Murugavel / 2016 மார்ச் 13 , மு.ப. 03:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
இடம்பெற்று வரும் இங்கிலாந்து பிறீமியர் லீக் போட்டிகளில், கடந்த சனிக்கிழமை (12) இடம்பெற்ற போட்டிகளில், மன்செஸ்டர் சிற்றி, நோர்விச் சிற்றி ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டி சமநிலையில் முடிவடைந்ததுடன் பௌர்ண்மௌத், சௌதாம்டன் ஆகிய அணிகள் வெற்றி பெற்றுள்ளன.
மன்செஸ்டர் சிற்றி, நோர்விச் சிற்றி ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில், இரண்டு அணிகளும் கோல்களைப் பெறாத நிலையில் போட்டி சமநிலையில் முடிவடைந்தது. இப்போட்டியில் மன்செஸ்டர் சிற்றியின் சேர்ஜியோ அக்ரோ இரண்டு பந்துகளை கோல்கம்பத்தினை நோக்கி அடித்திருந்த போதும் நோர்விச் அணியின் கோல்காப்பாளர் அவற்றை இலாவகமாக தடுத்திருந்தார்.
இப்போட்டியில் பெறப்பட்ட சமநிலை முடிவையடுத்து 51 புள்ளிகளைப் பெற்றுள்ள மன்செஸ்டர் சிற்றி, இன்னும் 9 போட்டிகள் மீதமுள்ள நிலையில், இங்கிலாந்து பிறீமியர் லீக் புள்ளிகள் தரவரிசையில் முதலிடத்திலுள்ள லெய்செஸ்டரை விட ஒன்பது புள்ளிகள் பின்தங்கியுள்ளது.
இதேவேளை, இடம்பெற்ற ஏனைய போட்டிகளில், 3-2 என்ற கோல்கணக்கில் சுவான்சீயை பௌர்ண்மௌத் தோற்கடித்ததுடன் 2-1 என்ற கோல்கணக்கில் ஸ்டோக்கை சௌதாம்டன் தோற்கடித்திருந்தது.
இடம்பெற்ற போட்டிகளில், மன்செஸ்டர் சிற்றி, நோர்விச் சிற்றி ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டி சமநிலையில் முடிவடைந்ததுடன் பௌர்ண்மௌத், சௌதாம்டன் ஆகிய அணிகள் வெற்றி பெற்றுள்ளன.
மன்செஸ்டர் சிற்றி, நோர்விச் சிற்றி ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில், இரண்டு அணிகளும் கோல்களைப் பெறாத நிலையில் போட்டி சமநிலையில் முடிவடைந்தது. இப்போட்டியில் மன்செஸ்டர் சிற்றியின் சேர்ஜியோ அக்ரோ இரண்டு பந்துகளை கோல்கம்பத்தினை நோக்கி அடித்திருந்த போதும் நோர்விச் அணியின் கோல்காப்பாளர் அவற்றை இலாவகமாக தடுத்திருந்தார்.
இப்போட்டியில் பெறப்பட்ட சமநிலை முடிவையடுத்து 51 புள்ளிகளைப் பெற்றுள்ள மன்செஸ்டர் சிற்றி, இன்னும் 9 போட்டிகள் மீதமுள்ள நிலையில், இங்கிலாந்து பிறீமியர் லீக் புள்ளிகள் தரவரிசையில் முதலிடத்திலுள்ள லெய்செஸ்டரை விட ஒன்பது புள்ளிகள் பின்தங்கியுள்ளது.
இதேவேளை, இடம்பெற்ற ஏனைய போட்டிகளில், 3-2 என்ற கோல்கணக்கில் சுவான்சீயை பௌர்ண்மௌத் தோற்கடித்ததுடன் 2-1 என்ற கோல்கணக்கில் ஸ்டோக்கை சௌதாம்டன் தோற்கடித்திருந்தது.
18 minute ago
24 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
24 minute ago
1 hours ago