Shanmugan Murugavel / 2025 ஜனவரி 26 , பி.ப. 12:55 - 0 - {{hitsCtrl.values.hits}}

இத்தாலிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சீரி ஏ தொடரில், தமது மைதானத்தில் சனிக்கிழமை (25) நடைபெற்ற ஜுவென்டஸுடனான போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் நாப்போலி வென்றது.
நாப்போலி சார்பாக அன்ட்ரே-பிராங்க் ஸம்போ அங்குய்ஸா, றொமெலு லுக்காக்கு ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றதோடு, ஜுவென்டஸ் சார்பாகப் பெறப்பட்ட கோலை ரன்டல் கோலோ முவானி பெற்றிருந்தார்.
சீரி ஏ புள்ளிகள் பட்டியலில் 53 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் நாப்போலி காணப்படுகின்றது. 47 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் இன்டர் மிலனும், 46 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் அத்லாண்டாவும், 39 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் லேஸியோவும் காணப்படுகின்றன. இதில் நடப்புச் சம்பியன்களான இன்டர் மிலன் மற்றைய அணிகளை விட இரண்டு போட்டிகள் குறைவாக விளையாடியுள்ளதோடு, லேஸியோ மற்றைய அணிகளை விட ஒரு போட்டி குறைவாக விளையாடியுள்ளது.
36 minute ago
59 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
59 minute ago
1 hours ago