Shanmugan Murugavel / 2026 மார்ச் 24 , பி.ப. 07:27 - 0 - {{hitsCtrl.values.hits}}

நோர்வே, ஈக்குவடோருக்கெதிரான நெதர்லாந்தின் சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளன உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகளில் அவ்வணியின் முன்களவீரரான மெம்பிஸ் டிபே விளையாட மாட்டார் என பயிற்சியாளர் றொனால்ட் கூமன் திங்கட்கிழமை (23) தெரிவித்துள்ளார்.
நெதர்லாந்துக்காக அதிக கோல்களைப் பெற்றுள்ள 32 வயதான டிபே, பிரேஸில் கழகமான கொரிந்தியன்ஸுக்காக ஞாயிற்றுக்கிழமை (22) விளையாடும்போது காயமடைந்து பிளமெங்கோவுக்கெதிரான போட்டியின் 20ஆவது நிமிடத்தில் களத்திலிருந்து வெளியேறிருந்தார்.
டிபே திங்கட்கிழமை (23) ஸ்கானுக்கு உள்ளாகியபோதும் முடிவுகள் இன்னும் தெரியவில்லை என கூமன் கூறியுள்ளார். டிபே பயணிப்பார் என்றும் ஆனால் நல்லது போல் தோன்றவில்லை என செய்தியாளர் மாநாட்டில் கூமன் திங்கட்கிழமை (23) தெரிவித்தார்.
நெதர்லாந்தின் மத்தியகளவீரரான பிரெங்கி டி ஜொங், பின்களவீரரான மத்திஸ் டி லிஜிட் ஆகியோரும் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
9 minute ago
51 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
51 minute ago
2 hours ago