Shanmugan Murugavel / 2021 ஜூலை 28 , மு.ப. 10:56 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஜப்பானில் நடைபெற்றுவரும் டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகளில், பெண்களுக்கான 200 மீற்றர் பிறீஸ்டைல் நீச்சல் போட்டியில் பதக்கத்தை தவற விட்ட ஐக்கிய அமெரிக்காவின் கேட்டி லெடக்கி, 1,500 மீற்றர் பிறீஸ்டைலில் தங்கப் பதக்கம் வென்றிருந்தார்.
200 மீற்றரில் லெடக்கியின் பரம வைரியாக நோக்கப்பட்ட அவுஸ்திரேலியாவின் அரியான் டிட்மஸ், ஒரு நிமிடம் 53 செக்கன்கள் 50 மில்லி செக்கன்களில் போட்டித் தூரத்தைக் கடந்து ஒலிம்பிக் சாதனையுடன் வெற்றி பெற்றிருந்தார். பதக்கம் ஒன்றையே அடைய முடிந்திருக்காத லெடக்கி ஐந்தாமிடத்தையே பெற முடிந்திருந்தது.
இந்நிலையில், இம்முறையே ஒலிம்பிக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட 1,500 மீற்றரில், 15 நிமிடங்கள் 37 செக்கன்கள், 34 மில்லி செக்கன்களில் போட்டித் தூரத்தைக் கடந்து தங்கப் பதக்கம் வென்றிருந்தார்.
இதேவேளை, ஆண்களுக்கான 4 * 200 மீற்றர் பிறீஸ்டைல் நீச்சல் போட்டியில் பிரித்தானியா தங்கப் பதக்கம் வென்றிருந்தது. இரண்டாமிடத்தை ரஷ்ய ஒலிம்பிக் செயற்குழுவின் அணியும், வெண்கலப் பதக்கத்தை அவுஸ்திரேலியாவும் பெற்றிருந்தன.
44 minute ago
51 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
51 minute ago
1 hours ago
2 hours ago