Editorial / 2018 ஜூலை 16 , பி.ப. 09:34 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில், 10ஆம் இடத்திலிருந்து இரண்டு இடங்கள் முன்னேறி இலங்கை கிரிக்கெட் அணியின் சிரேஷ்ட வீரரான ரங்கன ஹேரத் எட்டாமிடத்தைப் பிடித்துள்ளார்.
தென்னாபிரிக்காவுக்கெதிரான முதலாவது டெஸ்டில் ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றியதைத் தொடர்ந்தே குறித்த முன்னேற்றத்தை ரங்கன ஹேரத் அடைந்துள்ளார். மற்றும்படி முதல் 10 பந்துவீச்சாளர்களுக்குள் மாற்றமில்லாதபோதும் ரங்கன ஹேரத்தும் நீல் வக்னரும் எட்டாமிடத்தை பகர்ந்துள்ள நிலையில் ஜொஷ் ஹேசில்வூட் ஒரு இடம் கீழிறங்கி 10ஆம் இடத்தில் காணப்படுகின்றார். முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,

இதேவேளை, தென்னாபிரிக்காவுக்கெதிரான் முதலாவது டெஸ்டில் 218 ஓட்டங்களைப் பெற்ற திமுத் கருணாரட்ண, டெஸ்ட் போட்டிகளுக்கான துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் 21 இடங்கள் முன்னேறி முதன்முறையாக 10ஆம் இடத்தைப் பிடித்துள்ளார். முதல் 10 துடுப்பாட்ட வீரர்களுள் வேறெந்த மாற்றமும் இடம்பெறவில்லை. முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
இந்நிலையில், பங்களாதேஷுக்கெதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், 2-0 என பங்களாதேஷை வெள்ளையடித்த மேற்கிந்தியத் தீவுகள், டெஸ்ட் போட்டிகளுக்கான அணிகளின் தரவரிசையில் ஒன்பதாமிடத்திலிருந்து எட்டாமிடத்துக்கு முன்னேறியுள்ளதுடன், எட்டாமிடத்திலிருந்த பங்களாதேஷ் ஒன்பதாமிடத்துக்கு கீழிறங்கியுள்ளது. இதுதவிர அணிகளின் தரவரிசையில் வேறெந்த மாற்றமும் ஏற்படவில்லை. அணிகளின் தரவரிசை பின்வருமாறு,
46 minute ago
53 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
53 minute ago
1 hours ago
2 hours ago