2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

திலீபனின் 38 ஆவது ஆண்டு நினைவேந்தல்

R.Tharaniya   / 2025 செப்டெம்பர் 15 , மு.ப. 11:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் மக்களின் உரிமைக்காக 12 நாட்கள் உணவையும் நீரையும் ஒறுத்து உயிர்த் தியாகம் செய்த தியாகதீபம் திலீபனின் 38ஆவது  ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நல்லூரில் நடைபெற்றது.

நல்லூர் கந்தன் ஆலயம் அருகே அவர் உண்ணாவிரதம் இருந்த இடத்தில் அஞ்சலி நடைபெற்றது, அதை தொடர்ந்து, நல்லூரான் பின் வீதியில் அமைந்துள்ள திலீபன் நினைவிடத்தில் நினைவேந்தல் இடம்பெற்றது.

இதன் போது பொதுச் சுடர் ஏற்றி மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இவ் நினைவேந்தல் நிகழ்வில் முன்னாள் போராளிகள் அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு மலரஞ்சலி செலுத்தினர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் துறை பொறுப்பாளரான திலீபன் இந்திய அமைதிப் படையிடம் ஐந்து அம்சக் கோரிக்கைகளை  1987 செப்டெம்பர் 15 ஆம் திகதி முன்வைத்து உணவையும் நீரையும் தவிர்த்து போராட்டத்தை முன்னெடுத்தார்.

அவரின் கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படாத நிலையில் 1986 செப்டெம்பர் 26 ஆம் திகதி முற்பகல் 10.48 மணிக்கு உயிர் நீத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .