2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

துடுப்பாட்ட மாத்திரம் 25 கோடி இந்திய ரூபாய்

Shanmugan Murugavel   / 2026 மார்ச் 30 , பி.ப. 02:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), கொல்கத்தா நைட் றைடர்ஸால் 25.2 கோடி இந்திய ரூபாய்களுக்கு ஏலமெடுக்கப்பட்ட அவுஸ்திரேலியாவின் சகலதுறைவீரர் கமரன் கிறீன் 10-12 நாள்களுக்கு பந்துவீசமாட்டாரென அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை விளக்கமளித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை (29) நடைபெற்ற மும்பை இந்தியன்ஸுக்கெதிரான போட்டியில் கிறீன் பந்துவீசியிருக்கவில்லை.

இந்நிலையில் கிறீனின் பந்துவீச்சு குறித்து போட்டி முடிவில் வினவப்பட்டதுக்கு அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையை வினவுங்கள் என நைட் றைடர்ஸின் அணித்தலைவர் அஜின்கியா ரஹானே பதிலளித்துள்ளார்.

அந்தவகையிலேயே முதுகு உபாதையொன்றிலிருந்து கிறீன் குணமடைந்து வருவதாக கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .