Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Freelancer / 2023 ஒக்டோபர் 03 , பி.ப. 10:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேச கிரிக்கெட் சபையின் உலகக் கிண்ணத் தொடருக்கான பயிற்சிப் போட்டிகளில்,
திருவனந்தபுரத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற தென்னாபிரிக்காவுடனான பயிற்சிப்
போட்டியில் மழை குறுக்கிட்ட நிலையில் டக்வேர்த் லூயிஸ் முறைப்படி ஏழு ஓட்டங்களால்
நியூசிலாந்து வென்றது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து, டெவோன் கொன்வேயின் 78 (73),
டொம் லேதமின் 52 (56), கிளென் பிலிப்ஸின் 43 (40), அணித்தலைவர் கேன் வில்லியம்ஸனின்
37 (51) ஓட்டங்களோடு 8 விக்கெட்டுகளை இழந்து 50 ஓவர்களில் 321 ஓட்டங்களைப் பெற்றது.
பந்துவீச்சில், லுங்கி என்கிடி, மார்கோ ஜன்சன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா 37 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 211
ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது மழை குறுக்கிட்ட நிலையில் அத்தோடு போட்டி முடிவுக்கு
வந்திருந்தது.
துடுப்பாட்டத்தில், குயின்டன் டி கொக் ஆட்டமிழக்காமல் 84 (89), றஸி வான் டர்
டுஸன் 51 (56), ஹென்றிச் கிளாசென் 39 (37) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், ட்ரெண்ட்
போல்ட் 2, மிற்செல் சான்ட்னெர் ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
இதேவேளை கெளகாத்தியில் நடைபெற்ற மற்றைய பயிற்சிப் போட்டியில் பங்களாதேஷை
இங்கிலாந்து வென்றிருந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago
5 hours ago