Shanmugan Murugavel / 2025 செப்டெம்பர் 22 , பி.ப. 11:03 - 0 - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானுக்கெதிரான டெஸ்ட் தொடருக்கான தென்னாபிரிக்கக் குழாமிலிருந்து அணித்தலைவர் தெம்பா பவுமா கெண்டைக்கால் பின்தசைக் காயம் காரணமாக விலகியுள்ளார்.
பவுமா இல்லாத நிலையில் ஏய்டன் மார்க்ரம் அணித்தலைவராக செயற்படவுள்ளார்.
இக்குழாமில் சுழற்பந்துவீச்சாளர் சைமன் ஹாமர் குழாமுக்கு மீள அழைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அடிவயிற்றுப் பகுதி உபாதையைக் கொண்டுள்ள கேஷவ் மஹராஜ், இரண்டாவது டெஸ்டுக்கான தேர்வுக்கே தயாராக இருப்பாரெனக் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றதை திரும்பப் பெற்ற குயின்டன் டி கொக், ஒருநாள், இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டி குழாம்களுக்குத் திரும்பியுள்ளார்.
அனைது வகையான போட்டிகளில் விளையாடும் வீரர்களில் கொர்பின் பொஷ், டெவால்ட் பிறெவிஸ் தவிர மற்றைய அனைவரையும் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளுக்கான தொடரில் தென்னாபிரிக்கா ஓய்வளிக்கப்பட்டுள்ளது.
இருபதுக்கு – 20 குழாமுக்கு டேவிட் மில்லரும், ஒருநாள் குழாமுக்கு மத்தியூ பிறெட்ஸ்கேயும் தலைமை தாங்கவுள்ளனர்.
நமீபியாவுக்கெதிரான ஒரு இருபதுக்கு – 20 போட்டியை தென்னாபிரிக்க விளையாடவுள்ள நிலையில் அப்போட்டியில் டொனோவன் பெரைரா தலைமை தாங்கவுள்ளனர்.
டெஸ்ட் குழாமில் வேகப்பந்துவீச்சாளர் லுங்கி என்கிடி இடம்பெறவில்லை.
டெஸ்ட் குழாம்: ஏய்டன் மார்க்ரம் (அணித்தலைவர்), டேவிட் பெடிங்ஹாம், கொர்பின் பொஷ், டெவால்ட் பிறெவிஸ், டொனி டி ஸொர்ஸி, ஸுபைர் ஹம்ஸா, சைமன் ஹாமர், மார்கோ ஜன்சன், கேஷவ் மஹராஜ் (2ஆவது டெஸ்டுக்கு மாத்திரம்), வியான் முல்டர், செனுரன் முத்துசாமி, ககிஸோ றபாடா, றையான் றிக்கெல்டன், ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ், பிரனெலன் சுப்ராயன், கைல் வெரைன்.
இருபதுக்கு – 20 குழாம்: டேவிட் மில்லர் (அணித்தலைவர்), கொர்பின் பொஷ், டெவால்ட் பிறெவிஸ், நன்ட்ரே பேர்கர், ஜெரால்ட் கொயட்ஸி, குயின்டன் டி கொக், டொனோவன் பெரைரா, றீஸா ஹென்ட்றிக்ஸ், ஜோர்ஜ் லின்டி, கவெனா மபஹா, லுங்கி என்கிடி, நக்பா பீற்றர், லுஹான்-ட்றீ பிறிட்டோறியஸ், அன்டிலெ சிமெலேன், லிஸாட் வில்லியம்ஸ்
ஒருநாள் குழாம்: மத்தியூ பிறெட்ஸ்கே (அணித்தலைவர்), கொர்பின் பொஷ், டெவால்ட் பிறெவிஸ், நன்ட்ரே பேர்கர், ஜெரால்ட் கொயட்ஸி, குயின்டன் டி கொக், டொனி டி ஸொர்ஸி, டொனோவன் பெரைரா, பிஜோன் போர்ச்சூன், ஜோர்ஜ் லின்டி, கவெனா மபஹா, லுங்கி என்கிடி, நக்பா பீற்றர், லுஹான்-ட்றீ பிறிட்டோறியஸ், சினெதெம்பா குஷெலே.
நமீபியா போட்டிக்கான குழாம்: டொனோவன் பெரைரா (அணித்தலைவர்), நன்ட்ரே பேர்கர், ஜெரால்ட் கொயட்ஸி, குயின்டன் டி கொக், பிஜோன் போர்ச்சுன், றீஸா ஹென்ட்றிக்ஸ், ருபின் ஹெர்மன், கவெலா மபஹா, றிவால்டோ மூன்சாமி, நக்பா பீற்றர், லுஹான்-ட்ரீ பிறிட்டோறியஸ், அன்டிலெ சிமெலேன், ஜேஸன் ஸ்மித், லிஸாட் வில்லியம்ஸ்.
8 hours ago
04 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
04 Nov 2025