2025 ஓகஸ்ட் 01, வெள்ளிக்கிழமை

தென் ஆபிரிக்காவுக்கு 143 ஓட்டங்கள் வெற்றி இலக்கு

Freelancer   / 2021 ஒக்டோபர் 30 , பி.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

இருபதுக்கு 20 உலகக் கிண்ண தொடரின் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 143 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

ஷார்ஜாவில் இடம்பெற்று வரும் இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற தென் ஆபிரிக்கா களத்தடுப்பை தெரிவு செய்தது. 

அதன்படி, முதலில் துடுப்பாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 142 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

துடுப்பாட்டத்தில், பத்தும் நிஸங்க 72 ஓட்டங்களையும் சரித் அசலங்க 21 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில், தப்ரேஸ் ஷம்சி 17 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களையும், டுவைன் பிரிட்டோரியஸ் 17 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .