Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 ஜனவரி 28 , பி.ப. 03:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு சர்வதேச போட்டித் தொடரை 2-1 என்ற ரீதியில் பாகிஸ்தான் கைப்பற்றியது.
இத்தொடரின் முதலாவது போட்டியில் நியூசிலாந்தும் இரண்டாவது போட்டியில் பாகிஸ்தானும் வெற்றிபெற்றிருந்த நிலையில், மெளன்ட் மகட்டரேயில் இன்று நடைபெற்ற தீர்க்கமான மூன்றாவது போட்டியில் 18 ஓட்டங்களால் வென்றமையைத் தொடர்ந்தே பாகிஸ்தான் தொடரைக் கைப்பற்றியது.
இப்போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான், 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 181 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், பக்கர் ஸமன் 46 (36), சப்ராஹ் அஹமட் 29 (21), உமர் அமீன் 21 (07), ஹரீஸ் சொஹைல் ஆட்டமிழக்காமல் 20 (12) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், மிற்செல் சான்ட்னெர், இஷ் சோதி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
பதிலுக்கு, 182 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து, 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 163 ஓட்டங்களையே பெற்றுத் தோல்வியடைந்தது. துடுப்பாட்டத்தில், மார்டின் கப்தில் 59 (43), றொஸ் டெய்லர் 25 (11), மிற்செல் சான்ட்னெர் 24 (12), டொம் ப்ரூஸ் 22 (15) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், ஷடாப் கான் 2, மொஹமட் ஆமிர், ஆமீர் யமின் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
இப்போட்டியின் நாயகனாக ஷடாப் கான் தெரிவானதோடு, இத்தொடரின் நாயகனாக மொஹமட் ஆமிர் தெரிவானார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago