Shanmugan Murugavel / 2025 செப்டெம்பர் 23 , மு.ப. 11:32 - 0 - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான டெஸ்ட் தொடரை இந்தியாவின் றிஷப் பண்ட் தவறவிடவுள்ளார்.
இத்தொடருக்கான தேர்வுக் குழுக் கூட்டமானது நாளை நடைபெறவுள்ள நிலையில், 15 பேர் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
இங்கிலாந்துக்கெதிரான நான்காவது டெஸ்டின்போது பண்டின் இடது காலில் முறிவு ஏற்பட்டிருந்த நிலையில், துடுப்பாட்டம் மற்றும் விக்கெட் காப்பை மீள ஆரம்பிப்பதற்கு முன்பதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் மருத்துவ அணியின் மேலதிக இற்றைப்படுத்தலுக்கு காத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
பண்ட் இல்லாத நிலையில் துருவ் ஜுரேல் இந்தியாவின் விக்கெட் காப்பாளராக செயற்படுவாரெனத் தெரிகிறது.
இதேவேளை இத்தொடருக்காக நிதிஷ் குமார் ரெட்டி, தேவ்டுட் படிக்கல்லையும் தேர்வாளர்கள் கருத்திற் கொள்வார்களென எதிர்பார்க்கப்படுகிறது.
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago