Mayu / 2024 ஜனவரி 01 , மு.ப. 10:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
பங்களாதேஷுக்கு எதிரான இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரை நியூசிலாந்து
சமப்படுத்தியது.
மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரில், முதலாவது போட்டியில் பங்களாதேஷ் வென்றதோடு, இரண்டாவது போட்டியில் முடிவேதும் பெறப்படாத நிலையில், மெளன்ட் மகட்டரேயில் நேற்று அதிகாலை நடைபெற்ற மூன்றாவது போட்டியில் டக்வேர்த் லூயிஸ் முறையில் நியூசிலாந்து வென்றமையைத் தொடர்ந்தே 1-1 என தொடர் சமநிலையில் முடிவடைந்தது.
இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற நியூசிலாந்தின் அணித்தலைவர், தமதணி முதலில்
களத்தடுப்பிலீடுபடும் என அறிவித்தார்.
அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ், டிம் செளதி (2), அடம் மில்ன் (2), பென்
சியர்ஸ் (2), மிற்செல் சான்ட்னெரிடம் (4) விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 19.2 ஓவர்களில் சகல
விக்கெட்டுகளையும் இழந்து 110 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்கு 111 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து,
மஹெடி ஹஸன் (2), ஷொரிஃபுல் இஸ்லாமிடம் (2) விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோதும்
பின் அலென்னின் 38 (31) ஓட்டங்களுடனும், ஜேம்ஸ் நீஷம் ஆட்டமிழக்காமல் 28 (20),
சான்ட்னெர் ஆட்டமிழக்காமல் 18 (20) ஓட்டங்களைப் பெற்று 14.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை
இழந்து 95 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் மழை குறுக்கிட்ட நிலையில் 17 ஓட்டங்களால்
டக்வேர்த் லூயிஸ் முறையில் நியூசிலாந்து வென்றது.
இப்போட்டியின் நாயகனாக சான்ட்னெரும், தொடரின் நாயகனாக ஷொரிஃபுல்லும்
தெரிவாகினர்.

4 hours ago
04 Apr 2026
04 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
04 Apr 2026
04 Apr 2026