Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
J.A. George / 2024 ஏப்ரல் 29 , மு.ப. 09:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
அடுத்தடுத்த இரண்டு போட்டியிலும் மோசமான தோல்வியை சந்தித்த ருத்துராஜ் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நடப்பு ஐபிஎல் தொடரின் 46வது போட்டியில் ஹைதராபாத் அணியை எதிர்கொண்டது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை அணி ஹைதராபாத்துக்கு 213 ஒட்டங்களை இலக்காக நிர்ணயித்தது.
சென்னை அணியில் அதிகபட்சமாக ருத்துராஜ் கெய்க்வாட் 98 ஒட்டங்களும் டேரியல் மிட்செல் 52 ஒட்டங்களும் எடுத்தனர்.
பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஹைதராபாத் அணியின் அனைத்து முக்கிய வீரர்களின் விக்கெட்டையும் கைப்பற்றி 134 ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்தியது.
இதன் மூலம் 78 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நடப்பு தொடருக்கான புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியது.
பந்துவீச்சில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் அதிகபட்சமாக துசார் தேஸ்பாண்டே 4 விக்கெட்டுகளையும், முஸ்தபிசுர் ரஹ்மான் மற்றும் பதிரான தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி சென்னை அணியின் வெற்றியை இலகுவாக்கினர்.
42 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
3 hours ago