Mithuna / 2024 ஜனவரி 30 , பி.ப. 01:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐவரி கோஸ்டில் நடைபெற்று வரும் தேசங்களுக்கான ஆபிரிக்கக் கிண்ணத் தொடரிலிருந்து நடப்புச் சம்பியன்களான செனகல் வெளியேற்றப்பட்டுள்ளது.

நேற்று அதிகாலை நடைபெற்ற ஐவரி கோஸ்டுடனான இறுதி 16 அணிகளுக்கான சுற்றுப் போட்டியில் தோற்றே தொடரிலிருந்து செனகல் வெளியேறியுள்ளது.
போட்டியின் வழமையான நேரத்தில் இரண்டு அணிகளும் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றிருந்த நிலையில், பெனால்டியில் 5-4 என்ற ரீதியில் வென்றே காலிறுதிப் போட்டிக்கு ஐவரி கோஸ்ட் முன்னேறி, செனகலை தொடரிலிருந்து வெளியேற்றியது.
செனகல் சார்பாகப் பெறப்பட்ட கோலை ஹபிப் டியல்லோவும், ஐவரி கோஸ்ட் சார்பாகப் பெறப்பட்ட கோலை பிராங்க் கெஸ்ஸியும் பெற்றிருந்தனர்.
4 hours ago
04 Apr 2026
04 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
04 Apr 2026
04 Apr 2026