Shanmugan Murugavel / 2015 நவம்பர் 02 , மு.ப. 02:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுவிற்ஸர்லாந்து பேஸில் உள்ளக டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில், பட்டத்தை கைப்பற்றுபவர்களில் முன்னணியில் இருந்த சுவிற்ஸர்லாந்தின் ரோஜர் பெடரர் 6-3, 5-7, 6-3 என்ற செட் கணக்கில் தனது முன்னாள் வைரியான ஸ்பெயினின் ரஃபேல் நடாலை, கடந்த மூன்று வருடங்களில் முதற்தடவையாக தோற்கடித்து தனது ஏழாவது பேஸில் பட்டத்தை கைப்பற்றினார்.
இதற்கு முன், 2012ஆம் ஆண்டு இந்தியன் வெல்ஸ் அரையிறுதிப்போட்டியில் நடாலைத் தோற்கடித்திருந்த பெடரர், இறுதியாக இருவரும் சந்தித்த ஐந்து தடவையும் தோல்வியைத் தழுவியிருந்தார்.
தனது சொந்த நகரில் 12ஆவது இறுதிப்போட்டியை விளையாடிய பெடரர், மூன்றாவது செட் வரை சென்று இரண்டு மணித்தியாலங்கள் மூன்று நிமிடங்கள் நீடித்த போட்டியில் நடாலிடம் இருந்து பலத்த போட்டியை எதிர்கொண்டு வெற்றிபெற்றிருந்தார்.
இந்த வெற்றியானது பெடரரின் வாழ்நாளில் 88ஆவது வெற்றி ஆகும். எனினும் நடால், பெடரருக்கு இடையிலான மோதல்களில், 23-11 என நடாலே முன்னிலை வகிக்கின்றார்.
முன்னதாக ஆண்கள் இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டியில் பிரித்தானியாவின் ஜேமி மறே, அவுஸ்திரேலியாவின் ஜோன் பீர்ஸ் ஜோடி, 7-5, 7-5 என்ற செட் கணக்கில் ஒஸ்திரியாவின் அலெக்ஸாண்டர் பெயா, பிரேசிலின் புருனோ சோர்ஸ் ஜோடியிடம் தோல்வி கண்டிருந்தனர்.
45 minute ago
52 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
52 minute ago
1 hours ago
2 hours ago