2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

நாளை மூன்றாவது ஒருநாள் சர்வதேசப் போட்டி: தொடரைக் கைப்பற்றுவது யார்?

Shanmugan Murugavel   / 2023 ஜூன் 06 , பி.ப. 10:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியானது ஹம்பாந்தோட்டையில் நாளை காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.

மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியில் ஆப்கானிஸ்தானும், இரண்டாவது போட்டியில் இலங்கையும் வென்ற நிலையில், தீர்மானமிக்க போட்டியாக இப்போட்டி அமையவுள்ள நிலையில் இலங்கையணியில் மாற்றமெதுவும் இருக்காது என நம்பப்படுகின்றது.

மறுபக்கமாக இப்போட்டியிலும் ஆப்கானிஸ்தானின் நட்சத்திர வீரரான ரஷீட் கான் விளையாடுவது சந்தேகத்துக்கிடமானதாகவே காணப்படுகின்ற நிலையில் அவ்வணியிலும் மாற்றமெதுவும் இருக்காதென்றே நம்பப்படுகின்றது.

குறிப்பாக ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர்கள் எதிர் இலங்கையின் துடுப்பாட்டவீரர்களிலேயே தொடரின் முடிவு தீர்மானிக்கப்படப் போகிறது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .