2025 ஜூலை 21, திங்கட்கிழமை

நியூசிலாந்தின் வெற்றிக்கு 257 ஓட்டங்கள் தேவை

Shanmugan Murugavel   / 2023 மார்ச் 12 , பி.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்டில் நியூசிலாந்து வெற்றி பெறுவதற்கு 9 விக்கெட்டுகள் கைவசமுள்ள நிலையில் 257 ஓட்டங்களை நாளைய இறுதி நாளில் நியூசிலாந்து பெற வேண்டியுள்ளது.

இரண்டு போட்டிகள் கொண்ட இத்தொடரில், கிறைஸ்ட்சேர்ச்சில் கடந்த வியாழக்கிழமை ஆரம்பமான இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட இலங்கை, குசல் மென்டிஸின் 87, அணித்தலைவர் திமுத் கருணாரத்னவின் 50, அஞ்சலோ மத்தியூஸின் 47, தனஞ்சய டி சில்வாவின் 46, தினேஷ் சந்திமாலின் 39 ஓட்டங்களோடு சகல விக்கெட்டுகளையும் இழந்து தமது முதலாவது இனிங்ஸில் 355 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில், டிம் செளதி 5, மற் ஹென்றி 4, மிஷெல் பிறேஸ்வெல் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

பதிலுக்கு தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை, டரைல் மிற்செல்லின் 102, மற் ஹென்றியின் 72, டொம் லேதமின் 67 ஓட்டங்களோடு சகல விக்கெட்டுகளையும் இழந்து 373 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில், அசித பெர்ணாண்டோ 4, லஹிரு குமார 3, கசுன் ராஜித 2, பிரபாத் ஜெயசூரிய ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

இந்நிலையில், தமது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை, மத்தியூஸின் 115, டி சில்வாவின் ஆட்டமிழக்காத 47, சந்திமாலின் 42 ஓட்டங்களோடு சகல விக்கெட்டுகளையும் இழந்து 302 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில், பிளையர் டிக்னர் 4, ஹென்றி 3, செளதி 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

அந்தவகையில் 285 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு தமது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடும் நியூசிலாந்து, இன்றைய நான்காம் நாள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 28 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. தற்போது களத்தில் லேதம் 11 ஓட்டங்களுடனும், கேன் வில்லியம்ஸன் ஏழு ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமலுள்ளனர். வீழ்த்தப்பட்ட விக்கெட்டை ராஜித கைப்பற்றினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X