Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 டிசெம்பர் 03 , பி.ப. 01:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
நியூசிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், வெலிங்டனில் நேற்று முன்தினம் ஆரம்பமான முதலாவது டெஸ்டின் இன்றைய மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் மேற்கிந்தியத் தீவுகள் அணி போராடி வருகிறது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட மேற்கிந்தியத் தீவுகள் அணி, தமது முதலாவது இனிங்ஸில் சகல விக்கெட்டுகளையும் 134 ஓட்டங்களுக்கு இழந்தது. துடுப்பாட்டத்தில், கெரான் பவல் 42 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில், நீல் வக்னர் 7 விக்கெட்டுகளையும் ட்ரெண்ட் போல்ட் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
பதிலுக்கு, தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து, 9 விக்கெட்டுகளை இழந்து 520 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது தமது ஆட்டத்தை இடைநிறுத்தியது. துடுப்பாட்டத்தில், டொம் பிளென்டல் ஆட்டமிழக்காமல் 107, கொலின் டி கிரன்ட்ஹொம் 105, றொஸ் டெய்லர் 93, ஹென்றி நிக்கொல்ஸ் 67 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், கேமார் றோச் 3, றொஸ்டன் சேஸ், மிக்கேல் கமின்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதனையடுத்து, தமது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிவரும் மேற்கிந்தியத் தீவுகள் அணி, நேற்றைய மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவின்போது 2 விக்கெட்டுகளை இழந்து 214 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. தற்போது களத்தில், கிரேய்க் பிறத்வெய்ட் 79, ஷை ஹோப் 21 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர். முன்னதாக, ஷிம்ரோன் ஹெட்மயர் 66, கெரான் பவல் 40 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர். பந்துவீச்சில், வீழ்த்தப்பட்ட 2 விக்கெட்டுகளையும் மற் ஹென்றி வீழ்த்தினார்.
3 minute ago
11 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
11 minute ago
2 hours ago