Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 நவம்பர் 28 , பி.ப. 09:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனது குடும்பத்துடன் நேரத்தை செலவளிப்பதற்காக, இங்கிலாந்து அணியின் சகலதுறை வீரர் பென் ஸ்டோக்ஸ் நியூசிலாந்துக்கான தனிப்பட்ட பயணமொன்றை மேற்கொண்டுள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
அவுஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுகிடையிலான ஐந்து டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட ஆஷஸ் தொடரில், பிறிஸ்பேணில் இடம்பெற்ற முதலாவது போட்டியில் இங்கிலாந்து தோற்றிருந்தது.
இந்நிலையிலேயே, ஐக்கிய இராச்சியத்தின் தலைநகரான இலண்டனிலுள்ள ஹீத்ரு விமானநிலையத்தில் முழுமையான கிரிக்கெட் உபகரணங்கள் கொண்ட தொகுதியுடன் பென் ஸ்டோக்ஸ் காணப்பட்ட நிலையிலேயே, அவுஸ்திரேலியாவுக்கு பென் ஸ்டோக்ஸ் செல்லுகிறார் என சமூக வலைத்தளங்களில் வதந்தி பரவியிருந்த நிலையிலேயே இங்கிலாந்து கிரிக்கெட் சபை மேற்குறித்த பதிலளிப்பை வழங்கியுள்ளது.
எவ்வாறெனினும் பென் ஸ்டோக்ஸுக்கு தடையில்லாச் சான்றிதழொன்று வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நியூசிலாந்தின் உள்ளூர் அணிகளுக்கிடையிலான 50 ஓவர்கள் கொண்ட போர்ட் கிண்ணத் தொடரிலும் இருபதுக்கு – 20 தொடரான கிங் சுப்பர் ஸ்மாஷிலும் பென் ஸ்டோக்ஸ் பங்கேற்பது குறித்து அவரின் பிரதிநிதிகளுடன் உத்தியோகபூர்வமற்ற ஆரம்ப கட்டப் பேச்சுவார்த்தைகளலிருப்பதாக, நியூசிலாந்து பிராந்திய அணியான கன்டர்பெரி இன்று தெரிவித்துள்ளது.
அந்தவகையில், 50 ஓவர் போட்டியொன்றில் ஒட்டாகோ அணியை கன்டர்பெரி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை எதிர்கொள்ளும்போது, குறித்த போட்டியில் பென் ஸ்டோக்ஸ் விளையாடுவதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன.
இந்நிலையில், பென் ஸ்டோக்ஸின் ஏற்பாடுகள் இங்கிலாந்து கிரிக்கெட் சபையால் மேற்கொள்ளப்படவில்லை என அறியப்படுகின்ற நிலையில், பிறிஸ்பேணில் நேற்று முன்தினம் இரவே குறித்த விடயங்களை இங்கிலாந்து கிரிக்கெட் சபை அறிந்துள்ளது.
அந்தவகையில், ஆஷஸுக்கான இங்கிலாந்துக் குழாமுடனோ அல்லது இங்கிலாந்து லயன்ஸ் குழாமுடனோ அல்லது இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் உத்தியோகபூர்வமான பயிற்சி முகாம் எதுவிலோ இணைந்து கொள்ளவில்லையென இங்கிலாந்து கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
இரவு விடுதியொன்றுக்கு வெளியே இடம்பெற்ற கைகலப்பில் தாக்கினார் என்று கூறப்படும் குற்றச்சாட்டுக்களில், இவ்வாண்டு செப்டெம்பர் மாதம் 25ஆ,ம் திகதி பிறிஸ்டலில் கைது செய்யப்பட்ட பென் ஸ்டோக்ஸ் இன்னும் அவோன் மற்றும் சமர்செற் பொலிஸாரின் விசாரணையின் கீழேயே உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தாம் எந்த முடிவெடுக்கும் முன்னரும் பொலிஸாரின் குற்றச்சாட்டுகளுக்காக இங்கிலாந்து கிரிக்கெட் சபை காத்துள்ள நிலையில், அண்மைய எதிர்காலத்தில் இங்கிலாந்துக் குழாமுக்கு பென் ஸ்டோக்ஸ் அழைக்கப்படமாட்டார் என்றே நம்பப்படுகிறது.
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago