Editorial / 2018 நவம்பர் 05 , மு.ப. 04:39 - 0 - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில், 3-0 என நியூசிலாந்தை பாகிஸ்தான் வெள்ளையடித்துள்ளது.
இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் ஏற்கெனவே வென்றிருந்த பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகத்தின் டுபாயில் நேற்று இடம்பெற்ற மூன்றாவது போட்டியிலும் வென்றதைத் தொடர்ந்தே 3-0 என நியூசிலாந்தை வெள்ளையடித்தது.
இப்போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான், 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 166 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், பாபர் அஸாஅம் 79 (58), மொஹமட் ஹபீஸ் ஆட்டமிழக்காமல் 53 (34), ஷொய்ப் மலி 19 (09) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், கொலின் டி கிரான்ட்ஹொம் 2, லொக்கி பெர்கியூஸன் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
பதிலுக்கு, 167 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து, 16.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 119 ஓட்டங்களையே பெற்று 47 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. துடுப்பாட்டத்தில், அணித்தலைவர் கேன் வில்லியம்ஸன் 60 (380, கிளென் பிலிப்ஸ் 26 (24) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், ஷடாப் கான் 3, இமாட் வசீம், அறிமுக வீரர் வக்காஸ் மஸ்கூட் ஆகியோர் தலா 2, பாஹீம் அஷ்ரப் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
இப்போட்டியின் நாயகனாக பாபர் அஸாமமும் தொடரின் நாயகனாக மொஹமட் ஹபீஸும் தெரிவாகினர்.
6 minute ago
15 minute ago
20 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
15 minute ago
20 minute ago
1 hours ago