Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2025 ஜூன் 16 , மு.ப. 10:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை பாடசாலைகள் நீர் விளையாட்டுக்கள் சங்கத்தால் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ள இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான நீர் விளையாட்டுக்கள் சுற்றுப்போட்டி 2025 நிகழ்விற்கு நெஸ்லே மைலோ அனுசரணை வழங்குவதுடன்,கொழும்பிலுள்ள சுகததாச நீச்சல் வளாகத்தில் ஜூன் 17 முதல் 22 வரை இது இடம்பெறவுள்ளது.
நாடெங்கிலுமுள்ள சிறுவர்கள் தமது திறமைகளையும், ஆற்றல்களையும் வெளிக்காண்பிப்பதற்கு தேவையான மேடையை வழங்கி, விளையாட்டின் விழுமியங்கள் மூலமாக வெற்றியாளர்களைத் தோற்றுவிக்கும் தனது நோக்கத்தை நெஸ்லே லங்கா தொடர்ந்தும் உண்மையுடன் கட்டிக்காத்து வருகின்றது. மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக நீச்சல் வெற்றியாளர்களை வளர்த்து, விருத்தி செய்வதில் அரச அதிகார சபைகளுடன் இவ்வர்த்தக நாமம் கைகோர்த்து செயற்பட்டு வந்துள்ளது.
இந்த ஆண்டில் இடம்பெறும்,மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான 50 வது நீர் விளையாட்டுக்கள் சுற்றுப்போட்டிக்கு மீண்டும் அனுசரணை வழங்குவதற்கு இவ் வர்த்தக நாமம் முன்வந்துள்ளதுடன், நீச்சலிலும்,சுழி யோட்டத்திலும் தமது திறமைகளை வெளிக்காண்பிப்பதற்கு ஒவ்வொரு பிள்ளைக்கும் சமவாய்ப்பினை வழங்கி, விளையாட்டுக்களில் பல்துறைகளிலும் முன்னின்று உழைக்கும் தனது குறிக்கோளில் மிக உறுதியாகவுள்ளது.
மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக நீச்சல் வெற்றியாளர்களை உருவாக்கியுள்ள பெருமைமிக்க பாரம்பரியத்துடன்,இவ்விளையாட்டின் மகத்தான அளவிலான பரிணாம வளர்ச்சியின் நேரடிச் சாட்சியாக நெஸ்லோமைலோ திகழ்வதுடன், இன்று தனது பயணத்தை வலுவான இச்சுற்றுப்போட்டியின் அத்திவாரமாக மாற்றியமைத்துள்ளது.
சிறுவர்கள் தமதுதிறமைகளைக் காண்பிப்பதற்கு தேசிய மேடையை அவர்களுக்கு வழங்குகின்ற இச்சுற்றுப்போட்டியில் நாடெங்கிலுமிருந்து 275 பாடசாலைகளைச் சேர்ந்த 2000 க்கும் மேற்பட்ட மாணவியரும், 3000 க்கும் மேற்பட்ட மாணவர்களும் பங்குபற்றவுள்ளனர்.
அர்த்தமுள்ள மேடையை உருவாக்கும் கூட்டாண்மைகளை வளர்த்தும், விளையாட்டின் மூலமாக விலைமதிப்பற்ற பண்புகள் மற்றும் விழுமியங்களைக் கற்று தமது பிள்ளைகளின் வளர்ச்சியை மேம்படுத்துவதில் நாடெங்கிலுமுள்ள பெற்றோருக்கு உத்வேகமளித்தும், இலங்கையின் எதிர்கால வெற்றியாளர்களைத் தோற்றுவிப்பதில் நெஸ்லே மைலோ தொடர்ந்தும் தளராத உறுதியுடன் பயணித்துவருகின்றது.
2 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
7 hours ago
8 hours ago