2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

நீண்ட எதிர்காலம் குறித்து நிச்சயமில்லை

Shanmugan Murugavel   / 2016 ஜனவரி 14 , பி.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்க டெஸ்ட் அணியின் இடைக்காலத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஏ.பி டீ வில்லியர்ஸ், நீண்ட காலத்துக்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்கான உறுதியை மறுத்துள்ளதோடு, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் குறிப்பிடத்தக்களவு மாற்றம் ஏற்படாவிட்டால், சவ்தேச கிரிக்கெட்டிலிருந்து முன்னணி வீரர்கள் விலகி விடுவர் எனவும் எச்சரித்துள்ளார்.

இங்கே சில வதந்திகள் காணப்படுவதாகவும் அவற்றில் பெரும்பாலனவற்றில் சிறிதளவு உண்மை இருப்பதாக டீவில்லியர்ஸ், தற்போதில்லாமல், இரண்டு, மூன்று வருடங்களாக சரியான பதில்களைத் தேடிக்கொண்டிருப்பதாகவும் குறைந்த கிரிக்கெட்டை விளையாடி, என்னை புத்துணர்வாக வைத்து ஒவ்வொரு போட்டியிலும் மகிழ்வாக விளையாட விரும்புகிறேன் என தெரிவித்தார்.

இதனையடுத்து, டெஸ்ட் போட்டிகளின் தலைமைப் பொறுப்பு அளிக்கப்படும்போது, தனது வாழ்நாள்க் கனவு என்று தெரிவித்திருந்தபோதும் தென்னாபிரிக்க டெஸ்ட் அணியை நிரந்தரமாக தலைமை தாங்கப்போகின்றார் எனத் தெளிவில்லாமல் உள்ளது. இந்நிலையில், தற்போது இந்த இரண்டு டெஸ்ட் போட்டிகள் பற்றியே தனது கவனம் உள்ளதாகவும், இதன்பின் அடுத்த டெஸ்ட் போட்டி, ஆறு மாதங்களின் பின்னரே உள்ளது எனவும் அதற்கிடையில் பல விடயங்கள் நடக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்தியன் பிறீமியர் லீக் போட்டிகளில் 2017ஆம் ஆண்டு வரை ரோயல் பெங்களூர் சலஞ்ஜேர்ஸ் அணியினால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள டீவில்லியர்ஸ் 9.5 கோடி இந்திய ரூபாயை ஊதியமாகப் பெறுகிறார். இந்தத் தொகையானது, அவர் தேசிய அணியில் விளையாடுவதற்காக பெறும் ஊதியத்தை விட பத்து மடங்கு ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .