Shanmugan Murugavel / 2015 டிசெம்பர் 11 , மு.ப. 04:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் இலங்கை அணிக்கும் நியூசிலாந்து அணிக்குமிடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியில் இன்றைய இரண்டாம் நாள் ஆட்டமுடிவில் தமது முதலாவது இன்னிங்சில் ஆடி வரும் இலங்கையணி நான்கு விக்கெட் இழப்புக்கு 197 ஓட்டங்களைப் பெற்று போராடி வருகிறது.
தற்போது களத்தில், தினேஷ் சந்திமால் 83 ஓட்டங்களுடனும் கிரித்துவன் விதானகே 10 ஓட்டங்களுடனும் ஆட்டமிழ்க்காமல் உள்ளனர். முன்னதாக, திமுத் கருணாரட்ன 84 ஓட்டங்களுடன் ஆடமிழந்திருந்தார்.
பந்துவீச்சில் நியூசிலாந்து அணி சார்பாக ட்ரெண்ட் போல்ட், டிம் சௌத்தி, நீல் வாக்னர், மிட்செல் சந்தர்ந தலா ஒவ்வொரு விக்கெட்டினை கைப்பற்றினர்.
முன்னதாக, நியூசிலாந்து அணியானது தமது முதலாவது இன்னிங்சில் 431 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்திருந்தது. அவ்வணி, சார்பாக துடுப்பாட்டத்தில், மார்ட்டின் கப்தில் 156 ஓட்டங்களையும் பிரண்டன் மக்கலம் 75 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் இலங்கையணி சார்பாக நுவான் பிரதீப் நான்கு விக்கெட்டுகளையும் துஷ்மந்த சமீர இரண்டு விக்கெட்டுக்களையும் அஞ்சலோ மத்தியுஸ், மிலிந்த சிரிவர்த்தன ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்
8 minute ago
19 minute ago
20 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
19 minute ago
20 minute ago