Shanmugan Murugavel / 2016 பெப்ரவரி 01 , மு.ப. 07:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
அடுத்த மாதம் இந்தியாவில் ஆரம்பமாகவுள்ள உலக இருபதுக்கு-20 தொடருக்கான நியூசிலாந்தின் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. பதினைந்து பேர் கொண்ட குழாமாகவே இக்குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிவிக்கப்பட்டுள்ள மேற்படிக் குழாமில், நேதன் மக்கலம், புறச் சுழற்பந்துவீச்சாளர் இஷ் சோதி, இடதுகை சகலதுறை வீரர் மிட்செல் சந்தர் ஆகியோர் சுழற்பந்துவீச்சாளர்களாக குழாமில் இடம்பிடித்துள்ளனர். எனினும் அண்மையில், பாகிஸ்தானுக்கெதிராக இடம்பெற்ற இருபதுக்கு-20 தொடரில் நியூசிலாந்து சார்பாக பங்கேற்றிருந்த புறச் சுழற்பந்துவீச்சாளர் டொட் அஸ்டிலுக்கு குழாமில் இடம் கிடைக்கவில்லை.
இது தவிர, காயமடைந்த வேகப்பந்துவீச்சாளர்கள் டிம் சௌதி, மிட்செல் மக்நெலகன், சிரேஷ்ட துடுப்பாட்ட வீரர் றொஸ் டெய்லர் ஆகியோர் தொடர் ஆரம்பிக்க முன்னர் குணமடைவார்கள் என்ற எதிர்பார்ப்பில் குழாமில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். ஏனைய வேகப்பந்துவீச்சாளர்களாக ட்ரெண்ட் போல்ட், அடம் மில்ன் குழாமில் இடம்பெற்றுள்ள நிலையில், மற் ஹென்றிக்கு இடம் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, பாகிஸ்தானுக்கெதிரான முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் சிறப்பாகச் செயற்பட்ட துடுப்பாட்டவீரர் ஹென்றி நிக்கோல்ஸும் குழாமில் இடம்பெற்றுள்ளார். இவர் விக்கெட் காப்பாளர் லுக் ரொங்கிக்கு காப்பாகவும் செயற்படவுள்ளார். இவர், நியூசிலாந்து சார்பாக இதுவரை எந்த இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டியிலும் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
குழாம்- கேன் வில்லியம்ஸன் (தலைவர்), மார்ட்டின் கப்தில், றொஸ் டெய்லர், ஹென்றி நிக்கோல்ஸ், கிராண்ட் எலியற், கொரே அன்டர்சன், கொலின் முன்றோ, லுக் ரோங்கி (விக்கெட் காப்பாளர்), மிட்செல் சாண்ட்னர், நேதன் மக்கலம், டிம் சௌதி, ட்ரெண்ட் போல்ற், மிட்செல் மக்நெலகன், அடம் மில்ன், இஷ் சோதி.
6 minute ago
10 Apr 2026
10 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
10 Apr 2026
10 Apr 2026