Shanmugan Murugavel / 2021 மார்ச் 23 , பி.ப. 04:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
பங்களாதேஷுக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரை நியூசிலாந்து கைப்பற்றியுள்ளது.
மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியை ஏற்கெனவே வென்றிருந்த நியூசிலாந்து, கிறைஸ்ட்சேர்ச்சில் இன்று நடைபெற்ற இரண்டாவது போட்டியையும் வென்றமையைத் தொடர்ந்தே, இன்னும் ஒரு போட்டி மீதமிருக்கையிலேயே தொடரைக் கைப்பற்றியுள்ளது.
இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற நியூசிலாந்தின் பதிலணித்தலைவர் டொம் லேதம், தமதணி முதலில் களத்தடுப்பிலீடுபடும் என அறிவித்தார்.
அந்தவகையில், முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய பங்களாதேஷ், ஆரம்பத்திலேயே லிட்டன் தாஸை, மற் ஹென்றியிடம் இழந்தது. பின்னர் அணித்தலைவர் தமிம் இக்பாலும், செளமியா சர்க்காரும் இனிங்ஸை நகர்த்திச் சென்ற நிலையில், 32 (46) ஓட்டங்களுடன் செளமியா சர்க்கார், மிற்செல் சான்ட்னெரிடம் ஆட்டமிழந்திருந்தார். அடுத்து குறிப்பிட்ட நேரத்தில் தமிம் இக்பாலும் 78 (108) ரண் அவுட்டாகியிருந்தார்.
தொடர்ந்து 34 (59) ஓட்டங்களுடன் முஷ்பிக்கூர் ரஹீம் சான்டெரிடம் வீழ்ந்தபோதும், மொஹமட் மிதுனின் ஆட்டமிழக்காத 73 (57) ஓட்டங்களோடு, 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 271 ஓட்டங்களை பங்களாதேஷ் பெற்றது.
பதிலுக்கு, 272 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து, ஆரம்பத்திலேயே மார்டின் கப்தில், ஹென்றி நிக்கொல்ஸ், வில் யங்க்கை முஸ்தபிசூர் ரஹ்மான், மஹெடி ஹஸனிடம் (2) இழந்து தடுமாறியது.
எனினும், அடுத்து ஜோடி சேர்ந்த டெவோன் கொன்வேயின் 72 (93), லேதமின் ஆட்டமிழக்காத 110 (108), ஜேம்ஸ் நீஷமின் 30 (34) ஓட்டங்களோடு, 48.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கை நியூசிலாந்து அடைந்தது.
இப்போட்டியின் நாயகனாக லேதம் தெரிவானார்.
46 minute ago
53 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
53 minute ago
1 hours ago
2 hours ago