Shanmugan Murugavel / 2025 ஜூலை 08 , பி.ப. 10:24 - 0 - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷுக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரை இலங்கை கைப்பற்றியது.
மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியை இலங்கையும், இரண்டாவது போட்டியை பங்களாதேஷும் வென்ற நிலையில் பல்லேகலவில் இன்று நடைபெற்ற தீர்மானமிக்க மூன்றாவது போட்டியை இலங்கை வென்ற நிலையிலேயே 2-1 என தொடரைக் கைப்பற்றியது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: இலங்கை
இலங்கை: 285/7 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: குசல் மென்டிஸ் 124 (114), சரித் அசலங்க 58 (68), பதும் நிஸங்க 35 (47) ஓட்டங்கள். பந்துவீச்சு: மெஹிடி ஹஸன் மிராஸ் 2/48, தஸ்கின் அஹ்மட் 2/51, ஷமிம் ஹொஸைன் 1/30, தன்ஸிம் ஹஸன் சகிப் 1/41, தன்வீர் இஸ்லாம் 1/61)
பங்களாதேஷ்: 186/10 (39.4 ஓவ. ) (துடுப்பாட்டம்: தெளஹிட் ஹிரிடோய் 51 (78), மெஹிடி ஹஸன் மிராஸ் 28 (25), பர்வீஸ் ஹொஸைன் எமொன் 28 (44), ஜாகிர் அலி 27 (35) ஓட்டங்கள். பந்துவீச்சு: அசித பெர்ணாண்டோ 3/33, துஷ்மந்த சமீர 3/51, டுனித் வெல்லலாகே 2/33, வனிது ஹசரங்க 2/35)
போட்டியின் நாயகன்: குசல் மென்டிஸ்
தொடரின் நாயகன்: குசல் மென்டிஸ்
29 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
37 minute ago