2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

பங்களாதேஷுக்கெதிரான தொடரைக் கைப்பற்றுமா சிம்பாப்வே?

Shanmugan Murugavel   / 2025 ஏப்ரல் 27 , பி.ப. 08:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷ், சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்டானது சட்டோகிராமில் நாளை காலை 9.30 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.  

இரண்டு போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியை சிம்பாப்வே வென்ற நிலையில் தொடரைச் சமப்படுத்துவதற்கு இப்போட்டியை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் பங்களாதேஷ் உள்ளது.  

பங்களாதேஷ் குழாமில் அனாமுல் ஹக் இணைத்துக் கொள்ளப்பட்ட நிலையில் அணியில் மஹ்முடுல் ஹஸன் ஜோயை அவர் பிரதியிடுவாரென எதிர்பார்க்கப்படுகிறது. தவிர நஹிட் ரானாவுக்குப் பதில் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகத்தை தன்ஸிம் ஹஸன் மேற்கொள்வாரென எதிர்பார்க்கப்படுகிறது.  

இந்நிலையில் சிம்பாப்வேயை வெல்வதற்கு ஆரம்பத் துடுப்பாட்டவீரர்களிடமிருந்து ஓட்டங்கள் எதிர்பார்க்கப்படுவதுடன், அணித்தலைவர் நஜ்முல் ஹொஸைன் ஷன்டோ, மொமினுல் ஹக், முஷ்பிக்கூர் ரஹீம் ஆகியோரிடமிருந்து நீண்ட இனிங்ஸ்கள் எதிர்பார்கப்படுகின்றன.  

மறுபக்கமாக சிம்பாப்வே அணியானது தமது அணித்தலைவர் கிறேய்க் எர்வினிடமிருந்து நீண்ட இனிங்ஸை எதிர்பார்ப்பதுடன், விக்கெட் காப்பாளர்  நயஷா மயாவோவும் தன்னைத் திருத்திக் கொள்வாரென எதிர்பார்க்கும். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .