Shanmugan Murugavel / 2022 ஜனவரி 12 , பி.ப. 10:55 - 0 - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டை இனிங்ஸ் மற்றும் 117 ஓட்டங்களால் நியூசிலாந்து வென்றது.
இரண்டு போட்டிகள் கொண்ட இத்தொடரில், கிறைஸ்ட்சேர்ச்சில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்த இப்போட்டியின் நேற்றைய மூன்றாம் நாளை பொலோ ஒன் முறையில் தமது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த பங்களாதேஷ் சார்பாக லிட்டன் தாஸ் மாத்திரமே 102 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.
ஏனையோர் ஆரம்பங்களைப் பெற்றபோதும் குறிப்பிட்ட இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து சகல விக்கெட்டுகளையும் இழந்து 278 ஓட்டங்களையே பெற்றது. துடுப்பாட்டத்தில், தாஸ் தவிர அணித்தலைவர் மொமினுல் ஹக் 37, நுருல் ஹஸன் 36, நஜ்முல் ஹொஸைன் ஷன்டோ 29, மொஹமட் நைம் 24, ஷட்மன் இஸ்லாம் 21 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், கைல் ஜேமிஸன் 4, நீல் வக்னர் 3, றொஸ் டெய்லர், டரைல் மிற்செல், டிம் செளதி ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டை வீழ்த்தினர்.
இப்போட்டியின் நாயகனாக டொம் லேதமும், தொடரின் நாயகனாக டெவோன் கொன்வே தெரிவாகினர்.
இந்நிலையில், தொடர் 1-1 என சமனானது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: பங்களாதேஷ்
நியூசிலாந்து: 521/6 (துடுப்பாட்டம்: டொம் லேதம் 252, டெவோன் கொன்வே 109, டொம் பிளன்டல் ஆ.இ 57, வில் யங்க் 54, றொஸ் டெய்லர் 28 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஷொரிஃபுல் இஸ்லாம் 2/79, எபொடொட் ஹொஸைன் 2/143, மொமினுல் ஹக் 1/34)
பங்களாதேஷ்: 126/10 (துடுப்பாட்டம்: யாசிர் அலி 55, நுருல் ஹஸன் 41 ஓட்டங்கள். பந்துவீச்சு: ட்ரெண்ட் போல்ட் 5/43, டிம் செளதி 3/28, கைல் ஜேமிஸன் 2/32)
பங்களாதேஷ் (பொலோ ஒன்): 278/10 (துடுப்பாட்டம்: லிட்டன் தாஸ் 102, மொமினுல் ஹக் 37, நுருல் ஹஸன் 36, நஜ்முல் ஹொஸைன் ஷன்டோ 29, மொஹமட் நைம் 24, ஷட்மன் இஸ்லாம் 21 ஓட்டங்கள். பந்துவீச்சு: கைல் ஜேமிஸன் 4/82, நீல் வக்னர் 3/77, றொஸ் டெய்லர் 1/0, டிம் செளதி 1/54, டரைல் மிற்செல் 1/18)
போட்டியின் நாயகன்: டொம் லேதம்
தொடரின் நாயகன்: டெவோன் கொன்வே
53 minute ago
25 Jan 2026
25 Jan 2026
25 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
25 Jan 2026
25 Jan 2026
25 Jan 2026