Shanmugan Murugavel / 2025 ஜூன் 03 , மு.ப. 09:52 - 0 - {{hitsCtrl.values.hits}}

இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில் பங்களாதேஷை பாகிஸ்தான் வெள்ளையடித்தது.
மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளையும் ஏற்கெனவே வென்ற பாகிஸ்தான், லாகூரில் ஞாயிற்றுக்கிழமை (01) நடைபெற்ற மூன்றாவது போட்டியையும் வென்றமையையடுத்தே 3-0 என்ற ரீதியில் பங்களாதேஷை வெள்ளையடித்தது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட பங்களாதேஷ், பர்வேஸ் ஹொஸைன் எமோனின் 66 (34), தன்ஸிட் ஹஸனின் 42 (32), தெளஹிட் ஹிரிடோயின் 25 (18), அணித்தலைவர் லிட்டன் தாஸின் 22 (18), ஜாகிர் அலியின் ஆட்டமிழக்காத 15 (09) ஓட்டங்களோடு 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 196 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில் அப்பாஸ் அஃப்ரிடி 4-0-26-2, ஹஸன் அலி 4-0-38-2, ஷடாப் கான் 3-0-26-1 என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தனர்.
பதிலுக்கு 197 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான், மொஹமட் ஹரிஸின் ஆட்டமிழக்காத 107 (46), சைம் அயூப்பின் 45 (29), ஹஸன் நவாஸின் 26 (13), அணித்தலைவர் சல்மான் அக்ஹாவின் ஆட்டமிழக்காத 15 (12) ஓட்டங்களோடு 17.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது. பந்துவீச்சில் மெஹிடி ஹஸன் மிராஸ் 3-0-26-2, காலிட் அஹ்மட் 4-0-371 என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தனர்.
இப்போட்டியின் நாயகனாகவும், தொடரின் நாயகனாகவும் ஹரிஸ் தெரிவானார்.
2 hours ago
9 hours ago
27 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
9 hours ago
27 Mar 2026